Wednesday, February 12, 2025

Flipped Classroom என்றால் என்ன?

 

English | தமிழ்

Flipped Classroom என்பது மறுபுறம் திருப்பப்பட்ட வகுப்பறை அல்லது புரட்டப்பட்ட வகுப்பறை எனவும் கூறப்படும். இது ஒரு மாற்றுக் கற்பித்தல் உத்தியாகும். நவீன கற்பித்தல் உத்திகளில் பிரபலமானதும் பயன்மிக்கதுமான கற்பித்தல் முறையாகும்.

இது பாரம்பரிய கற்பித்தல் முறைகளுக்குப் புறம்பாக, பெரும்பாலும் வகுப்பறைக்கு வௌியே நிகழ்நிலைகளில் பாட உள்ளடக்கத்தினை மாணவர்களுக்கு வழங்கி மாணவர்களின் வேகத்திற்கும், இயலுமைகளுக்கும் ஏற்ப வீட்டிலிருந்து கற்று வகுப்பறையில் விவாதித்து அல்லது கலந்துரையாடிப் புரிந்துகொள்ளும் முறையாகும்.

அதாவது, கற்பிக்க வேண்டிய பாடத்தினையும், பாட உள்ளடக்கத்தினையும் ஆசிரியர் முன்கூட்டியே தயார்படுத்தி, அதற்குப் பொருத்தமான விடயங்களைக் கொண்டு மாணவர்களைக் கற்றலின்பால் ஈர்க்கும் வகையில் வீடியோக்களை தயார்செய்து கற்பித்தல் நடைபெறுவதற்கு முதல் நாளே மாணவர்களுக்கு அவ்வீடியோக்களை அனுப்பி வைத்தல் வேண்டும். மாணவர்கள் அதனை வீட்டிலிருந்தே பார்வையிட்டு குறித்த பாடத்தின் முன் அனுபவத்தினைப் பெற்றுக்கொண்டு பாடசாலைக்கு வருகைதரல் வேண்டும். வகுப்பறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியருடனான கலந்துரையாடலின் பின்னர் சிறந்த கற்றல் பேறுகளை மாணவர்களிடம் வௌிக்கொணரும் முறையே Flipped Classroom எனப்படும்.

இதன் போது மெல்லக் கற்கும் மாணவர்கள் கூட வீடியோக்களை நிறுத்தி நிறுத்தியும், மீண்டும் மீண்டும் பார்ப்பதன் மூலமும் பாட உள்ளடக்கத்தின் நோக்கத்தை அடைந்து கொள்ள இலகுவாக இருக்கின்றன.

Flipped Classroom முறையை பின்வரும் முறைகளைப் பின்பற்றி நடைமுறைப் படுத்துவதனூடாக கற்பித்தலை மேலும் வினைத்திறனாக்கலாம்.

Planning - திட்டமிடல்

கற்பிக்க வேண்டிய பாடத்தினையும் பாட உள்ளடக்கத்தினையும் முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளல்.

Recording - பதிவு செய்தல்

பாட உள்ளடக்கத்திற்குப் பொருத்தமான விடயங்களை உள்ளடக்கியதாகவும் மாணவர்களைக் கவரக்கூடயதும் கற்றல் நோக்கங்களை பிரதிபலிக்கக்கூடியதுமாக வீடியோக்களை பதிவு செய்தல்.

Sharing - பகிர்தல்

தயார் செய்யப்பட்ட வீடியோக்களை அல்லது அவற்றின் லிங்கை மாணவர்களுக்கு அனுப்பி வைத்தல்.

Change - மாற்றம்

ஆசிரியரால் அனுப்பப்பட்ட வீடியோக்களைப் பார்த்த பின்னர் பாட விடயம் தொடர்பாக மாணவர்களின் அறிவில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் வீடியோக்கள் அமைந்திருக்க வேண்டும்.

Grouping - குழுவாக்கல்

வகுப்பறையில் மாணவர்களை குழுக்களாகப் பிரித்து மாணவர்கள் கற்ற விடயங்களில் அவர்களது திறன்களையும் வௌிக்காட்டும் வகையில் செயற்பாடுகளில் ஈடுபத்தல்.

Regrouping - ஒருங்கிணைத்தல்

மீண்டும் மாணவர்களை ஒன்றாக்கி குழுக்களின் விடயங்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்குதல். உரையாடல், நாடகம், விவாதம் போன்றவற்றினூடாக இவை இடம்பெறலாம்.

அதன் பின்னர் மதிப்பீடு, மறு பரிசீலனை, பின்னூட்டல் போன்றவை இடம்பெறலாம்.

Flipped Classroom கற்றல் முறையில் கற்றலை மாணவர்களே ஆரம்பிக்கின்றனர். அவர்களது சந்தேகங்களை ஆசிரியர் தீர்க்க உதவுவார். எனவே மாணவர்கள்வீடியோக்களைப் பார்வையிட்ட பின் ஆவலோடு வினாக்களை தொடுக்க காத்திருப்பர். ஆசிரியர் விடையளிப்பதன் மூலம் பாட விடயம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

இவ்வாறு முன்கூட்டியே மாணவர்கள் பாடத்திற்கு தயார்படுத்தப்பட்டு வகுப்பறையில் முடிவுக்கு வருவதானால் அனைத்து மாணவர்களும் தத்தமது இயலுமைகளுக்கேற்ப போதியளவு நேரம் எடுத்து சுயமாக கற்றலில் ஈடுபட இக்கல்வி முறை ஏதுவாக அமைகின்றது.

No comments:

Post a Comment

Popular Posts