இலங்கையின் அரச பல்கலைக்கழக முறைமையானது க.பொ.த (உ/த) பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக தகைமை பெற்ற மாணவர்களில் 25% மாணவர்களுக்கு மாத்திரமே சேவையாற்ற முடியும். அரச பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசிக்க முடியாத பெரும்பான்மையான மாணவர்கள் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25 அ பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்த உள்நாட்டு நிறுவனங்கள் அல்லது அரச சார்பற்ற உள்ளூர் பட்டம் வழங்கும் நிறுவனங்களை வாங்க முடியாது. இந்த பற்றாக்குறையை நிரப்பும் முகமாக அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்குடன் 2017 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் வழிகாட்டுதலின் பிரகாரம் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் (IFSLS) நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அதன்படி, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அதிக சந்தை கேள்வி மற்றும் தொழில்சார் பெறுமதியுடனான பட்டப்படிப்பு கற்கைநெறிகளை தொடர்வதற்கு மாணவர்களுக்கு அரசாங்கம் வட்டியில்லா கடனை வழங்குகிறது. மேலதிக செலவினங்களை ஈடுசெய்வதற்காக மாணவர்கள் தமது விருப்பத்தின் பேரில் ரூபா 300,000/- க்கு உட்பட்ட வட்டியற்ற கடனொன்றையும் பெற்றுக்கொள்ள முடியும். முழு கடன் காலமான பன்னிரண்டு (12) ஆண்டுகளில் மாணவர்கள் சார்பாக வட்டியை அரசாங்கம் ஏற்கும். அசல் கடன் தொகையை மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த ஏழு (7) அல்லது எட்டு (8) ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும். பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னர் மீள்கொடுப்பனவை ஆரம்பிப்பதற்கு முன்னர் மாணவர்களுக்கு ஒரு (1) வருட சலுகை காலம் வழங்கப்படுகிறது. IFSLS ஆன்லைன் அமைப்பு மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
2021,2022, 2023 ஆம் ஆண்டுகளில் க.பொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
மாணவர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு முன்பு இந்த கையேட்டை முழுமையாக படிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Online application available since 2025.01.22
Deadline: 2025.02.22




