Wednesday, February 12, 2025

க.பொ.த உயர் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான தகைமைகள் (Including Pending)

  

க.பொ.த உயர்தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்கள் மற்றும் நியமங்களின் அடிப்படையில் பின்வரும் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

Circulars: 2008/17(ii,i), 25/2013, 27/2013, 26/2014, 16/2018

Pass in G.C.E (O/L)

3C, 2S with Language or Mathematics

Qualified for G.C.E (A/L)

3C, 3S with Language and Mathematics

க.பொ.த உயர் தரத்தில் கற்பதற்கு மாணவர்கள் க.பொ.த. (சா/த) தகைமையை ஓர் அமர்விலோ அல்லது இரு அமர்வுகளிலோ நிறைவு செய்ய முடியும்.

Qualified to A/L in One sitting of O/L (ஓர் அமர்வில் .பொ.. உயர் தரத்திற்கு தகைமை பெறுதல்)

3C, 3S with Language and Mathematics in O/L

க.பொ.த. (சா/த) பரீட்சையில் போதனா மொழியும் கணிதமும் உள்ளடங்கலாக மொத்தமாக 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல். அதில் குறைந்தபட்சம் 03 திறமைச் சித்திகளையும் (C) 03 சாதாரண சித்திகளையும் (S) பெற்றிருத்தலாகும்.

Qualified to A/L in Two sitting of O/L இரு அமர்வுகளில் .பொ.. (சா/) தகைமை பெறுவதாயின் பின்வரும் முறைகளில் ஏதாவது ஒன்றின் மூலம் தகைமை பெற்று உயர் தரம் கற்கலாம்.

  1. மிகக் குறைந்த தகைமையான 3C, 3S இற்கு திறமைச் சித்திகளில் ஒன்று குறைந்தால் (2C, 4S எனின்)  உள்ள ஒரு பாடத்தில் SBA  இலுள்ள அல்லது அதற்கு மேலுள்ள பெறுபேறு சேர்க்கப்படும் என்பதோடு மீண்டும் எந்தப் பாடமும் எடுத்துக் கொடுக்கத் தேவையில்லை. இது போதனா மொழிக்கும் கணிதத்திற்கும் பொருந்தாது. பாடசாலைப் பரீட்சார்த்தியாக இரண்டாவது தடவை பரீட்சைக்குத் தோற்றியோரும் இவ்வாறு SBA மூலம் திறமைச் சித்தியொன்றைப் பூர்த்திசெய்து கொள்ளலாம். இதற்காக முதலாவது அமர்வின் SBA புள்ளியைப் பயன்படுத்த முடியும்.
  2. முதல் பெறுபேற்றில் போதனா மொழி அல்லது கணிதம் உள்ளடங்கலாக குறைந்தபட்சம் 03 திறமைச் சித்திகளுடன் மொத்தமாக 05 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல். (3C, 2S with Language or Mathematics). இவ்வாறான மாணவர்களை தற்காலிகமாக உயர் தரத்தில் கலைப் பிரிவில் கற்க அனுமதிக்கலாம். எனினும் அடத்த வருடமே (2ஆம் அமர்விலேயே) எஞ்சிய தேவையான தகைமையை பூர்த்தி செய்தல் வேண்டும். இல்லாவிடின் பாடசாலையை விட்டு இடைநிறுத்த வேண்டும். (பெறுபேறு மீள் பரிசீலனைக்குச் சென்றிருந்தால் அதன் முடிவு வரும்வரை கல்வி கற்க அனுமதிக்கலாம்)
  3. க.பொ.த (சா/த) பரீட்சையில் 06 பாடங்களில் 03 திறமைச் சித்திகளுடன் சித்தியடைந்து கணிதப்பாடத்தில் சித்தியடையாத மாணவர்கள் அடுத்து வரும் இரண்டு வருடங்களில் (2ஆம் அமர்வில் அல்லது 3ஆம் அமர்வில்) கணிதப் பாடத்தில் சித்தியடைய வேண்டும் எனும் நிபந்தனையில் கலைப் பாடத்துறையில் அல்லது உயிரியல் தொழில்நுட்பப் பாடங்கள் உள்ளடங்கலான தொழில்நுட்ப பாடத்துறையில் கற்பதற்கு அனுமதிக்கப்படலாம். (26/2014)
  4. அவ்விரண்டு வருடங்களுக்குள் கணிதப் பாடத்தில் சித்தியடைவதற்கான சந்தர்ப்பம் 3C, 3S உடன் 06 பாடங்களில் சித்தயடைந்து கணிதப்பாடத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ள சலுகையாகும்.
  5. மேலே 2. இல் கூறியவாறு போதனா மொழி உட்பட 3C, 2S உடன் 05 பாடங்களில் மட்டும் சித்தயடைந்து கணிதப்பாடத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு இது பொருந்தாது என்பதோடு அத்தகைய மாணவர்கள் அடுத்த வருடத்திலேயே (2ஆம் அமர்விலேயே) கணிதம் சித்தியடைதல் வேண்டும். இல்லாவிடின் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்படல் வேண்டும். இந் நிபந்தனையை கவனியாது க.பொ.த (உ/த) பரீட்சைக்கு மாணவர் தோற்றுவதற்கு பாடசாலைகள் அனுமதித்திருப்பின் அம்மாணவன் பல்கலைக்கழக தெரிவிற்கு போதுமான புள்ளி பெற்றிருப்பினும் கூட பல்கலைக்கபழகத்திற்கு நிகழ்சிலையில் (Online) விண்ணப்பிக்க முடியாது நிலை இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:

  • க.பொ.த (சா/த) பரீட்சையில் 06 பாடங்களில் (3C, 3S) சித்தயடைந்து கணிதப் பாடத்தில் சித்தியடையத் தவறும் மாணவர்கள் அடுத்து வரும் வருடங்களில் எடுத்துத் தருவாதாக (Pending) கற்பதற்கு அனுமதிக்கப்படுவது  ஒன்றில் கலைப் பிரிவிலோ அல்லது உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் மாத்திரமேயாம்.
  • க.பொ.த (சா/த) சித்தி எதுவுமே இல்லாத அல்லது (சா/த) சித்தியடையாத மாணவர்கள் பாடசாலைகளில் உயர் தர தொழில் பாடத்துறையில் இணைந்து கல்வி கற்க முடியும்.

No comments:

Post a Comment

Popular Posts