க.பொ.த (உ/த) பாடப் பிரிவுகளில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் வேறுபட்ட தகைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும். க.பொ.த. உயர் தரத்தில் பின்வரும் 07 பாடப்பிரிவுகள் காணப்படுகின்றன.
- Arts Stream - கலைப் பிரிவு
- Commerce Stream - வர்த்தகப் பிரிவு
- Bio Science Stream - உயிரியல் விஞ்ஞானப் பிரிவு
- Physical Science Stream - பௌதீக விஞ்ஞானப் பிரிவு
- Engineering Technology - பொறியியல் தொழில்நுட்பப் பிரிவு
- Bio System Technology - உயிர் முறைமைகள் தொழிநுட்பப் பிரிவு
- Vocational Stream - தொழிற்பாடப் பிரிவு
1. கலைப் பிரிவு (Arts Stream)
கலைப் பிரிவில் கற்கும் மாணவர்கள் குறைந்த தகைமையாக போதனா மொழி மற்றும் கணிதம் உட்பட 3C, 3S சித்தி பெற்றிருப்பதோடு பின்வரும் விஷேட தகைமைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
- க.பொ.த சாதாரண தரத்தில் பெறப்பட்டுள்ள 03 திறமைச் சித்திகளில் ஒன்றாவது உயர் தரத்திற்கு தெரிவு செய்யும் பாடமொன்றுடன் தொடர்புடையதாக இருத்தல் வேண்டும். சித்திரம்/ சங்கீதம்/ நடனம்/ நாடகமும் அரங்கியலும் எனும் ஏதாவது ஒரு பாடத்தினை பயில்வதாயின் அக்குறிப்பிட்ட பாடத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் திறமைச் சித்தி (C) பெற்றிருத்தல் வேண்டும். (பிரயோக செயற்பாடுகளைக் கொண்ட அழகியல் பாடங்களைப் பயில்வதற்கு தேவையான திறமைச் சித்தியை மாத்திரம் SBA மூலம் நிவர்த்தி செய்ய முடியும் - 2008/17-i)
- க.பொ.த (உ/த) மொழி/ சமயம்/ சமயம் சார்ந்த நாகரீகம் தொடர்பான பாடம் தெரிவு செய்வதாயின் அவற்றில் க.பொ.த சாதார தரத்தில் திறமைச் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். (2008/17)
- கணிதம் சித்தயடையாத மாணவர்கள் அடுத்து வரும் வருடங்களில் எடுத்துத் தருவதாக கூறி (Pending இல்) கற்க முடியம். (26/2014)
2. வர்த்தகப் பிரிவு (Commerce Stream)
வர்த்தகம்/ வணிகப் பிரிவில் கற்கும் மாணவர்கள் குறைந்த தகைமையாக போதனா மொழி மற்றும் கணிதம் உட்பட 3C, 3S சித்தி பெற்றிருப்பதோடு பின்வரும் விஷேட தகைமைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
க.பொ.த சாதாரண தரத்தில் பறப்பட்ட திறமைச் சித்திகள் 3C இல் ஒன்றாவது மயற்சியானமைக் கற்கை அல்லது வணிகமும் கணக்கீடும் அல்லது வரலாறு பாடத்தில் பெற்றிருத்தல் வேண்டும். (2008/17-ii)
3. உயிரியல் விஞ்ஞானப் பிரிவு (Bio Science Stream)
உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கற்கும் மாணவர்கள் குறைந்த தகைமையாக போதனா மொழி மற்றும் கணிதம் உட்பட 3C, 3S சித்தி பெற்றிருப்பதோடு பின்வரும் விஷேட தகைமைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
க.பொ.த சாதாரண தரத்தில் விஞ்ஞானத்தில் திறமைச் சித்தியும் (C) கணிதத்தில் சாதாரண சித்தியும் (S) பெற்றிருத்தல் வேண்டும். (2008/17)
4. பௌதீக விஞ்ஞானப் பிரிவு (Physical Science Stream)
பௌதீக விஞ்ஞானப் பிரிவில் கற்கும் மாணவர்கள் குறைந்த தகைமையாக போதனா மொழி மற்றும் கணிதம் உட்பட 3C, 3S சித்தி பெற்றிருப்பதோடு பின்வரும் விஷேட தகைமைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
- க.பொ.த சாதாரண தரத்தில் கணிதத்தில் திறமைச் சித்தியும் (C) விஞ்ஞானத்தில் சாதாரண சித்தியும் (S) பெற்றிருத்தல் வேண்டும். (2008/17-ii)
5. பொறியியல் தொழில்நுட்பப் பிரிவு (Engineering Technology)
பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் கற்கும் மாணவர்கள் குறைந்த தகைமையாக போதனா மொழி மற்றும் கணிதம் உட்பட 3C, 3S சித்தி பெற்றிருப்பதோடு பின்வரும் விஷேட தகைமைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
- க.பொ.த சாதாரண தரத்தில் கணிதத்தில் திறமைச் சித்தியும் (C) விஞ்ஞானத்தில் சாதாரண சித்தியும் (S) பெற்றிருத்தல் வேண்டும். (25/2013)
- இப்பிரிவில் எடுத்துத் தருவதாகக் கூறி (Pending) படிக்க முடியாது.
6. உயிர் முறைமைகள் தொழிநுட்பப் பிரிவு (Bio System Technology)
உயிர் முறைமைகள் தொழில்நுடபப் பிரிவில் கற்கும் மாணவர்கள் குறைந்த தகைமையாக போதனா மொழி மற்றும் கணிதம் உட்பட 3C, 3S சித்தி பெற்றிருப்பதோடு பின்வரும் விஷேட தகைமைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.
- க.பொ.த சாதாரண தரத்தில் விஞ்ஞானத்தில் திறமைச் சித்தியும் (C) கணிதத்தில் சாதாரண சித்தியும் (S) பெற்றிருத்தல் வேண்டும். (25/2013)
- கணிதம் சித்தியடையாது 3C, 3S உள்ளவர்கள் தற்காலிகமாக (Pending இல்) கற்க முடிவதுடன் அடுத்து வரும் 2 வருடத்திற்குள் கணிதத்தில் சித்தயடைய வேண்டும். (26/2014)
7. தொழிற் பாடப் பிரிவு (Vocational Stream)
க.பொ.த (உ/த) கற்பதற்கு 13 வருடகால உத்தரவாதக் கல்வித் திட்டத்தின் கீழ் இறுதியாக 2017 ஆம் ஆண்டில் அறிமுகப்படத்தப்பட்ட பாடப் பிரிவே தொழிற்பாடப் பிரிவாகும்.
இப்பிரிவில் கல்வி கற்பதற்கு க.பொ.த (சா/த) சித்தி கருத்திற் கொள்ளப்பட மாட்டாது. க.பொ.த (சா/த) சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் சித்தயடையாத மாணவர்கள் அனைவரும் இப்பாடப் பிரிவில் கல்வி கற்க முடியும்.
இது மாணவர்களுக்கு தொழில் முறைக் கல்வியை வழங்கும் ஒரு பாடத் துறையாகும்.
No comments:
Post a Comment