Wednesday, February 12, 2025

பாடசாலைகளில் பணியாற்ற வேண்டிய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடவேளைகளின் எண்ணிக்கை.

  

கல்வி அமைச்சின் 06/2021 இற்கு அமைவாக 2021.05.01 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பாடசாலைகளில் பாடரீதியாக பணியாற்றவேண்டிய ஆசிரியர், அதிபர்களின் எண்ணிக்கை, கற்பித்தலில் ஈடுபட வேண்டிய பாடவேளைகளின் எண்ணிக்கை  மற்றும் கற்பித்தல் நேரங்களின் அளவுகள் கீழ்வரும் அட்டவணையில் உள்ளவாறு அமைதல் வேண்டும்.


பதவி

மாணவர் எண்ணிக்கை

பாட​வேளை

கற்பித்தல் நேரம் (ஒரு வாரத்திற்கு)

அதிபர்

ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒரு அதிபர் இருத்தல் வேண்டும்

01 - பிரதி அதிபர்

400 இலும் அதிகம்

10

400 நிமிடங்கள்

02 - பிரதி அதிபர்

1500 இலும் அதிகம்

உயர் தரம் = 150+
தரம் 06-11 = 800+​
மொத்த மாணவர் தொகை = 2000+

10

400 நிமிடங்கள்

03 - பிரதி அதிபர்

2000 – 3000 இற்கும் இடைப்பட்டது

உயர் தரம் = 150+
தரம் 06-11 = 800+
மொத்த மாணவர் தொகை = 2000+

ஒரு பிரதி அதிபர் கற்பித்தல் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு முழுநேர நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தலாம்.

 

3000 இற்கும் அதிகமான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலையில் 2 பிரதி அதிபர்களும் கற்பித்தல் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு முழுநேர நிர்வாக நடவடிக்க்களில் ஈடுபடுத்தலாம்.

........

 

 

 

 

 

........

02 - உதவி அதிபர்கள்

மாணவர் எண்ணிக்கை கீழ் குறிப்பிட்ட நிலமைகளையும் பூர்த்தி செய்யும் பாடசலைகளுக்கு

தரம் 01-05 = 500+
தரம் 06-11 = 200+

12

480 நிமிடங்கள்

02 - உதவி அதிபர்கள்

மாணவர் எண்ணிக்கை கீழ் குறிப்பிட்ட நிலமைகளையும் பூர்த்தி செய்யும் பாடசலைகளுக்கு

தரம் 06-11 = 500+
உயர் தரம் = 100+

12

480 நிமிடங்கள்

01 - மேற்பார்வை ஆசிரியர்

1000 - 1500

16

640 நிமிடங்கள்

02 - மேற்பார்வை ஆசிரியர்

1501 - 3000

16

640 நிமிடங்கள்

03 - மேற்பார்வை ஆசிரியர்

3001 – 5000

16

640 நிமிடங்கள்

மாணவர் ஆலோசனைப் பணிக்கான ஆசிரியர்கள்

300 விட அதிகமானால்

 


300 விட குறைவானால்

முழு நேரமாக ஈடுபடுத்தல்

 

 

15 பாடவேளைகள் விடுவித்து ஈடுபடுத்தலாம்

.........

 

 

10 மணித்தியாலங்கள் விடுவிப்பு

விசேட கல்விக்கான ஆசிரியர்கள்

விசேட கல்வி அலகுகள் அனுமதிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் அதற்காக 1: 5 ஆசிரியர் மாணவர் விகிதப்படி விசேடமாகப் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களை வழங்க முடியும்.

நூலக செயற்பாடுகளுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள்

நூலகம் ஒன்றுடன் கூடிய பாடசாலைகளின் நூலக நடவடிக்கைகளுக்காக நூலக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஆசிரியர் ஒருரை வழங்க முடியும்.

பாடம் கற்பிக்கும் கருவியாக மற்றும் முகமைத்துவ செயற்பாடுகளுக்கு கணினி பாவனை தொடர்பாக தேவைப்படும் ஆசிரியர் எண்ணிக்கை (IT Lab)

 

கணினி ஆய்வுகூடம் காணப்படாத பாடசாலைகளில்

முறையான கணினி ஆய்வுகூடங்கள் ஒன்று அல்லது அதற்குக் கூடுதலாக உள்ள பாடசாலைகளில் பணிகளுக்காக ஒரு ஆசிரியர் மேலதிகமாக உரித்தாவார்.

கணினி அறிவுடன் கூடிய ஆசிரியர் ஒருவரை ஒரு வாரத்திற்கு 10 மணித்தியாலங்கள் (15 பாடவேளைகள்) விடுவித்து பாடசலை முகமைத்துவ நடவடிக்கைகளுக்குத் தேவையான கணினி மூலமாக நிறைவேற்றக்கூடிய பணிகளுக்காகவும் ஈடுபடுத்தலாம்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளராகப் பணிபுரியும் ஆசிரியர்

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளராகப் பணி புரியும் ஆசிரியரின் கற்பிக்கும் பாடவேளைகளின் எண்ணிக்கைகளை 10 பாடவேளைகளால் விடுவிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபடவேண்டிய குறைந்தபட்ச காலம்

  • ஒரு ஆசிரியர் சேவை புரிய வேண்டிய பாடவேளைகளின் எண்ணிக்க ஒரு வாரத்திற்கு 40 பாட வேளைகளாகும். அதில் செயற்பாட்டு விடுப்புகளைத் தவிர ஆசிரியர் ஒருவர் பாடம் சார்ந்த கற்றல் கற்பத்தல் செயற்பாடுகளில் குறைந்தபட்சம் 30 பாட வேளைகளில் ஈடுபட வேண்டும்.
  • எஞ்சிய பாடவேளைகளைப் பாடசாலை மட்ட மதிப்பீட்டைத் திட்டமிடுதல், பாடங்களைத் திட்டமிடுதல், அப்பியாசக் கொப்பிகளைப் பார்த்தல், மேலதிக கற்பித்தல் ஒழுங்கமைப்பு, கணிப்பீடுளை மதிப்பிடுதல் மற்றும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின் அபிவிருத்தி போன்ற அதிபரால் வழங்கப்படும் ஏனைய பணிகளுக்காக ஈடுபடுத்தல் வேண்டும்.
  • பாடசாலை நேர அட்டவணையில் கற்பித்தலுக்காக இந்தக் குறைந்தபட்ச 30 பாடவேளைகளைப் பூர்த்தி செய்யாத ஆசிரியர்கள் விளையாட்டு, அழகியல் மற்றும் இணைப் பாடவிதான செயற்பாடுகளின் பொறுப்பை ஏற்று அதற்காக விசேட வருடாந்த திட்டமொன்றைத் தயாரித்து வருடாந்த நேர அட்டவணையுடன் அனுமதி பெறல்வேண்டும்.




No comments:

Post a Comment

Popular Posts