கற்றல் பாங்கு (Learning Styles) என்பது கற்றல் சூழ்நிலைகளில் தகவல்களைப் பெறுவதற்கும் செயலாக்குவதற்கும் ஒரு தனிநபரின் இயல்பான அல்லது பழக்கமான வடிவமாகும். அதாவது ஒருவர் ஒரு விடயத்தைக் கற்றுக் கொள்ளும் விதம்/ முறை கற்றல் பாங்கு எனலாம்.
மாணவர்கள் கற்றுக் கொள்வதில் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றனர். அவர்களது கற்றல் பாணிகளும் இயலுமைகளும் வேறுபடுகின்றன. அவ்வாறே ஒரு மாணவன் ஒரு பாடத்தினை ஒரு விதத்திலும் இன்னொரு பாடத்தினை வேறொரு விதத்திலும் கற்கக் கூடியவனாக இருப்பான்.
எனவே மாணவர்களின் கற்றல் பாங்குகளுக்கேற்ப ஆசிரியர்கள் கற்பித்தலை திட்டமிட வேண்டியுள்ளது.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயனுள்ள கற்றல் உத்திகளை (Effective Learning Strategies) தெரிவு செய்வதற்கும் கற்பிப்பதற்கும் மாணவர்களின் கற்றல் பாணியை (Learning Styles) அறிந்திருத்தல் அவசியமாகும்.
பொதுவாக பின்வரும் முறைகளில் மாணவர்கள் கற்கின்றனர்.
- காட்சி/ பார்த்துக் கற்றல் - Visual Learning
- செவிவழிக் கற்றல் - Auditory Learning
- பிரயோகக்/ இயக்கவியல் கற்றல் - Kinesthetic Learning
1. காட்சி/ பார்த்துக் கற்றல் - Visual Learning
- உலக வரைபடத்தை காட்டி கற்பித்தல்.
- ஞாயிற்றுத் தொகுதியன் இயக்கத்தை வீடியோவாகக் காட்டுதல்.
2. செவிவழிக் கற்றல் - Auditory Learning
- குழு விவாதங்களை நடாத்துதல்.
- மாணவர் முன்வைப்பக்களுக்கு இடமளித்தல்.
- கதை கூறல்
3. பிரயோக/ இயக்கவியல் கற்றல் - Kinesthetic Learning
- பரிசோதனைகளில் மாணவர்களை ஈடுபடுத்தல்.
- மாணவர்களை விளையாட்டுக்களில் ஈடுபடுத்தி கற்பித்தல்.
- கணிதப் படிமுறை அறிவுறுத்தல்களை நிறைவேற்றுவதன் மூலம் விடையினைப் பெற வழிகாட்டல்.

No comments:
Post a Comment